விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.04.2025 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ்,தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.04.2025 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.;

Update: 2025-04-22 17:26 GMT
பெரம்பலூர்மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.04.2025 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், தகவல். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ்,தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.04.2025 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News