வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் தகவல்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் தகவல்!;
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27% அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 103 வருடங்களாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 585 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5.3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2025-26 முதலாம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ் நாயர் தணிக்கை செய்யப்படாத முதலாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது : 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச காலாண்டு நிகர லாபத்தை நாங்கள் அடைந்துள்ளோம், இது எங்களது கடன் மற்றும் வைப்பு வணிகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியால் கிளைகளை விரிவுபடுத்துவதிலும், அடையப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த காலாண்டில், முக்கிய நகரங்களில் 7 புதிய கிளைகளை திறந்து, எங்கள் விநியோக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். வங்கியின் டிஜிட்டல் மாற்றத்திற்காகவும், வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்த செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காகவும் பல திட்டமுறை கூட்டாண்மைகளில் நாங்கள் நுழைந்துள்ளோம்., இது வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இவை போன்ற நடவடிக்கைகள், பொறுப்பான கடன் வழங்கல் மற்றும் முறையான risk management செயல்பாடுகளில் நமது கவனம் ஆகியவை, எதிர்காலங்களில் நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சிக்கான பாதையை அமைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து அடிப்படை அளவீடுகளிலும் வங்கி தொடர்ந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக துணைத் தலைவர், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கு கொண்டனர்.