கரூர் மாவட்டத்தில் 3,32,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் 3,32,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

Update: 2025-01-09 11:22 GMT
கரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 3,32,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். தமிழக மக்கள் அனைவரும் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தல ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், சென்னையில் இன்று திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம், சைதாப்பேட்டை, சின்னமலை நியாயவிலைக் கடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள 3,33,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு 408 முழு நேர நியாய விலை கடைகள், 229 பகுதிநேர நியாய விலை கடைகள் மற்றும் இரண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என மொத்தம் 637 நியாய விலை கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு வழங்கும் பணியை கரூர் மாநகராட்சி அருகம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆச்சிமங்கலம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

Similar News