காங்கேயத்தில் 3500 பேர் கலந்துகொண்ட மாரத்தான் போட்டி  முன்னால் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு துவக்கி வைத்தார் 

காங்கேயத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதில் 3500 பேர் கலந்து கொண்டனர். காவல்துறை முன்னால் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு துவக்கி வைத்தார். 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.காலை 5 மணி முதல் காங்கேயம் நகர் பகுதிகள் விழாக்கோலமாக காட்சியளித்தது.வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்

Update: 2024-08-12 04:46 GMT
காங்கேயம் கரூர் சாலை தனியார் திருமண மண்டபத்தில் இருந்து மாரத்தான் போட்டிகள் துவங்கியது.காங்கேயம் ரன்னர்ஸ் மற்றும் காங்கேயம் டவுன் ரோட்டரி இணைந்து நடத்தும் 3ம் ஆண்டு மிக பிரமாண்டமான போட்டியானது காலை மாலை 5 மணி அளவில் தொடங்கியது.  இந்த மாரத்தான் போட்டியை முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த பின்னர் முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு அவர்களும் 5 கிலோமீட்டர் மாரத்தானில் போட்டியாளர்களுடன் கலந்துகொண்டு போட்டியின் தூரத்தை நிறைவு செய்தார்.காலை 5 மணிக்கு  தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3500 க்கும்  மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்,பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சிறு வயது போட்டியாளர்கள் முதல் முதியோர்கள் வரை ஆர்வமிகுந்த அனைவரும் கலந்து கொண்டு மாரத்தான் பந்தயத்தில் போட்டியிட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர். 5 கிலோ மீட்டர்,10 கிலோ மீட்டர்,21 கிலோமீட்டர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியாளர்கள் பந்தய தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கின்றனர் என்பதை கணக்கிட அவர்களுக்கு வழங்கப்பட்ட பேட்ஜில் சிப் பொருத்தப்பட்டு துல்லியமாக கணக்கிட படுவதாகவும் மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கின்றனர்.  காலை 5 மணி முதல் காங்கேயம் நகர் பகுதிகள் விழாக்கோலமாக காட்சியளித்தது.வழி நெடுகிலும் பொதுமக்கள் போட்டியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு பணிகளில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியது : - காங்கேயம் மாரத்தான் இன்றைக்கு 3500 பேர் ஓடுகின்றோம் வாழ்த்துக்கள். மேலும் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு கோல்ட் மெடல் கிடைக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஓடியாக வேண்டும் அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு காங்கேயம் ஏனென்றால் 5 வயது முதல் 80 வயது வரை ஓடிக் கொண்டுள்ளனர். அதேபோல் அந்தந்த ஊரில் குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் 10 கிலோமீட்டர் ஆவது ஓடுங்கள் என தெரிவித்தார்.

Similar News