திருமணமான 4 மாதத்தில் பெண் மாயம்
மதுரை உசிலம்பட்டி அருகே திருமணமாகி 4 மாதத்தில் மாயம் என கணவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டியில் வசிக்கும் தமிழ் பாண்டியின் மனைவி பிரகஷினி ( 19) இவர்களுக்கு கடந்த நான்கு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என அவரது கணவர் தமிழ் பாண்டி வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.