பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த 4 பேர் கைது.

பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த 4 பேர் கைது செய்தனர்.;

Update: 2025-01-24 15:44 GMT
பரமத்திவேலூர், ஜன. 24- பரமத்திவேலூர் அருகே அனிச்சம்பாளையத்தில் தடுப்பணை அருகே காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடிப்பதாக அப்பகுதியை சேர்ந்தபொதுமக்கள் வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்குசென்றபோலீசார் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட மீன் வெடியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை பிடித்துவிசாரணை நடத்தினர். விசாரணையில், மோகனூர் தாலுகா கீழ் பாலப்பட்டி பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலா ளிகள் நவீன் (வயது 23), அஜித் (28), நத்திஷ் (23), கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் அருகே பழனிமுத்து நகரை சேர்ந்த நீர்வளத்துறை தற்காலிக பணியாளர் கோகுல் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் போலீ சார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களி டம் இருந்து 20 கிலோ மீன்மற்றும் 10 நீர் வாத்துகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News