சேலம் அருகே பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சுதா (வயது32). அதேபகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், இளவரசன், அரவிந்த், தமிழ்ச்செல்வன். இவர்கள் சுதாவிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அவர் பணம் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம், மீண்டும் சுதாவிடம் மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு அவர்கள் சுதாவை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து அவர் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய இளவரசன் (30), அரவிந்த் (25), தமிழ்ச்செல்வன் (32), ரமேஷ் (54) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.