கண்டமனூர் காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.26) குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சுடுகாட்டுப் பகுதியில் போலீசாரை கண்டதும் 5 நபர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கருப்பசாமி, ஜெயப்பிரகாஷ், ஆனந்தபாண்டி, சர்மா, இளங்கோவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்