திருப்புவனத்தில் நீதிபதி 4ஆம் நாள் விசாரணை
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக நீதிபதி விசாரணை;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அஜித்குமார் மரணம் அடைந்த தொடர்பாக நீதியரசர் ஜான் சுந்தர்லால் சுரேஷ் 4வது நாளாக விசாரணை செய்து வருகிறார். இன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் நேரடியாக வருகை தந்து காவல் ஆய்வாளர் மற்றும் ஏடிஎஸ்பி காவல்துறை உயர் அதிகாரியிடம் விசாரணை செய்ய வருகை தந்துள்ளார். நிகிதா புகார் நேரடியாக கொடுத்தாரா இல்லை தொலைபேசி மூலமாக தெரிவித்தாரா? புகாரை விசாரிக்கச் சொன்ன அதிகாரி யார்? உள்ளிட்ட விவரங்களை நீதியரசர் கேட்டுப் பெற்றார்