உத்தனப்பள்ளி அருகே பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி உள்பட 4 பேர் படுகாயம்.
உத்தனப்பள்ளி அருகே பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி உள்பட 4 பேர் படுகாயம்.;
கிருஷ்ணகிரி மவட்டம் உத்தனப்பள்ளி அடுத்துள்ள தேவசானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி இவர் கோவில் முனியப்பன் திருவிழாவிற்காக பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை வாங்கி தந்து வீட்டில் உள்ள மாட்டு கொட்டகை வைத்திருந்தார்.இந்த நிலையில் வெங்கடேசன் மகன் சரண் என்பவர் மாட்டு கொட்டகையில் அருகே இறைச்சியை தீயில் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போதே எதிர்பாராத விதமாக தீப்பொறி பறந்து சென்று மாட்டு கொட்டகை வைத்திருந்த பட்டாசு மீது விழுந்தது இதனால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது இதில் பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா, சரண் மற்றும் பெரியசாமியின் உறவினர் ஹரிஷ் ஆகியோர் 4பேர் படுகாயம் அடைந்தனர் இதை அடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்அங்கு கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்