திருச்செங்கோட்டில் ரூ 4 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகப் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கம்
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் ரூ.4 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாக கட்டுமான பணிகளை திருச்செங்கோடு MLA ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடுநகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்;
திருச்செங்கோட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம் அதை சுற்றி உள்ள வணிக கடைகள் பழுதடைந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ஒரு நாலு கோடியை 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது 12000 சதுர அடி பரப்பளவில் கட்ட உள்ள வணிக வளாகத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுதிருச்செங்கோடு மேற்கு நகர செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் நகராட்சி பொறியாளர் சரவணன்ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர் மேலும் நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, நகரச் செயலாளர்கள் குமார்,மாவட்ட இணை செயலாளர் லாவண்யா ரவி விளையாட்டு மேம்பாட்டு அணி வெற்றி செந்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார்,நகர் மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவணன் முருகன் செல்லம்மாள் தேவராஜன் சினேகா ஹரிகரன் புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேஸ்வரன்,அடுப்பு ரமேஷ் ராஜா தாமரைச்செல்வி மணிகண்டன் செல்வி ராஜவேல், அண்ணாமலை ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.