அமிர்தி பூங்காவில் கடந்த ஆண்டு 40 லட்சம் வசூல்!
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக உள்ள அமிர்தி பூங்காவில் கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பூங்கா திறக்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு அமிர்தி பூங்கா விசேஷ நாட்களில் வழக்கம்போல் செயல்பட்டது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்து பொழுதை கழித்தனர். சுடந்த 2024-ம் ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் அமிர்தி சிறுவன உயிரின பூங்காவை கண்டு ரசித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவுக்கட்டணம் மற்றும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் என மொத்தம் ரூ.40 லட்சத்து 9 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.