ஆரணி ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மற்றும் புதிய 41 அடி உயர காளி சிலைக்கு மகா கும்பாபிஷேக விழா.
ஆரணி சைதாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மற்றும் புதிய 41 அடி உயர ஸ்ரீ அஷ்டபுஜ மங்கள காளி சிலைக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;
ஆரணி சைதாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மற்றும் புதிய 41 அடி உயர ஸ்ரீ அஷ்டபுஜ மங்கள காளி சிலைக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆரணி சைதாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயிலை புதுப்பித்து நூதன கருங்கல் கர்ப்ப கிரகம் மற்றும் முன் மண்டபம் அமைத்தும், கோயிலினுள் 41 அடி உயரத்தில் ஸ்ரீ அஷ்டபுஜ மங்கள காளி சிலை அமைத்தும் திருப்பணிகள் நிறைவு செய்தும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, முதல் கால, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால. நான்காம் கால யாக பூஜை, மகாபூர்ணாஹூதி, ஆகியவை நடத்தப்பட்டு கலசங்களில் புனித நீரை கோவில் விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 41 அடி ஸ்ரீ அஷ்டபுஜ மங்கள காளி சிலைக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாரதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ். இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். ஆரணி செய்தியாளர் கு.சீனிவாசன்