தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் 42வது வணிகர் தின மாநில மாநாடு குறித்து விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெ

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் 42வது வணிகர் தின மாநில மாநாடு குறித்து விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-02-19 13:48 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் 42வது வணிகர் தின மாநில மாநாடு குறித்து விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட பொதுக்குழு நிகழ்ச்சி யில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது GST வரி விதிப்பு சட்ட முறைகளை மத்திய அரசு விரைவாக எளிமைப்படுத்த வேண்டும், வியாபாரிகளுக்கு விதிக்கும் சிறு சிறு வரிகளையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு விதிக்கும் பல்வேறு வரிகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாவட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்டன. மேலும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம ராஜா 42வது மாநில வணிகர் சங்க மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதேபோல மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் 2025-ல் வணிகர்கள் மாநாடு வியாபாரி களின் ஆதரவு வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும்‌ என்றார் மேலும் தமிழக அரசின் 2025 பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு இடர்பாடுகள் ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும். செஸ் வரியில் வரிக்கு உட்படாத சில பருப்புகளை வாகன சோதனையின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும். வியாபாரி கள் மீது போடப்படும் அனைத்து வரிகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும். வியாபாரிகள் உரிமம் பெறுவதற்கு அதிக கட்டணங்களை வசூலிக்க படக்கூடாது என்றார். மேலும் வணிக நலவாரிய குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு வணிக நல வாரியம் தொடங்கப்பட்டு கிடப்பிலேயே இருந்து வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை கலாச்சாரம் அதிகமாகி கொண்டு இருக்கிறது எனவும் வருகிற ஏப்ரல் 13ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி சார்பாக 5000 பேர் பங்கேற்க கூடிய மரத்தால் போட்டி நடைபெற உள்ளது என்றார். மேலும் அந்தப் போட்டியின் தலைப்பாக மது ஒழிப்போம் போதை ஒழிப்போம் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வாசகத்தின் அடிப்படையில் இந்த மராத்தான் போட்டி நடைபெறுகிறது என்றார். மேலும் பேசிய விக்ரமராஜா பிளாஸ்டிக் பிரச்சனை என்பது மாநில வாரியாக வேறுபடுகிறது எனவும் தற்போது நீலகிரி மாவட்ட த்தில் நீதிமன்ற உத்தரவு படி அங்கு உள்ள வணிகர்களுக்கு அரசு அதிகப்படியாக அபராதத்தை விதிக்கிறது என்றார். மேலும் சட்டம் இயற்றும் போது அந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சனையை முழுமையாக கையாள வேண்டும் என்றால் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தேவைப் படும் மூலப் பொருட்களை அரசு முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றார். மேலும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் வட மாநிலத்தில் இருந்து வருவோர்கள் தான் அதிகளவில் தமிழகத்திற்கு புகையிலை பொருட்களை அதிகம் கொண்டு வருகின்றனர். குட்கா புகையிலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்தால் போதாது நாடு முழுவதும் தடை விதித்தால் மட்டுமே குட்கா புகையிலை பயன்பாட்டை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

Similar News