ஓமலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தாலி சங்கிலி, பணம் திருட்டு

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு;

Update: 2025-04-02 03:42 GMT
ஓமலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தாலி சங்கிலி, பணம் திருட்டு
  • whatsapp icon
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாத்தியம்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). இவர் ஓமலூரில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி வள்ளி (45). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 5 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Similar News