தாராபுரத்தில் 5 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
தாராபுரத்தில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர்.5-கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும். புதிய திட்ட பணிகளை தொடங்கியும் வைத்தனர்.;
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.108 கோடி மதிப்பீட்டில் பள்ளி உட்டகட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முடிவுற்ற திட்டப்பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பிறகு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது, தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வளையற்கார நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32, இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள். ரூ.40. இலட்சம் மதிப்பீட்டில் சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ரூ.36.28 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்9. சூளைமேட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மொத்தம் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், பொறியாளர் சுமதி, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.