மேல்மருவத்தூர் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது
மேல்மருவத்தூர் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது;
மேல்மருவத்தூர் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த நிலையில் காவல்துறையினர் ராமாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேர் இரண்டு வாகனங்களில் வந்துள்ளனர் அவர்களை விசாரித்த போது முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். அப்பொழுது அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது இந்த நிலையில் சுனில்குமார், ஞானபிரகாசம், சந்துரு பிரகாஷ், இளவரசன், கௌதம் உள்ளிட்ட 5 பேரையும் காவல் நிலையத்தில் விசாரணை செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவர்களுடைய இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மதுராந்தகம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் இருப்பது தெரிய வந்தது இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.