கரூரில்,பெரியார் பிறந்த நாளில் மாட்டுக்கறி வழங்க முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது.
கரூரில்,பெரியார் பிறந்த நாளில் மாட்டுக்கறி வழங்க முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது.
கரூரில்,பெரியார் பிறந்த நாளில் மாட்டுக்கறி வழங்க முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது. தந்தை பெரியார் 146 வது பிறந்தநாளை இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியை நடத்தி பொதுமக்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வழங்க திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், காவல்துறையினர் மாட்டுக்கறி பிரியாணி வழங்குவதற்கு தடை விதித்தனர். இதனால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், காவல்துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் இந்த பேரணியில் பங்கேற்க இருந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து,கரூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். பின்னர் மாலை நான்கு மணிக்கு மேலாக அனைவரையும் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர். காவல்துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.