வேலூர் :ரூ.50 லட்சத்தில் அடிப்படை வசதிகள்!
வேலூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமையில் நடந்தது.;
வேலூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் கீழ்மொணவூர், பாலமதி உள்பட 13 ஊராட்சிகளில் ரூ.50 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை, சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.