தேங்கி நின்ற மழை நீரில்சொல்லாமல் இருக்க டிவிஎஸ் 50 யை திருப்பியபோதுமுன்னாள் சென்ற கண்டனர் லாரி மீது மோதி இருவர் உயிரிழப்பு

திருச்செங்கோடுமலை சுத்தி ரோட்டில் டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் வந்த 2 பேர் மழை நீருக்குள் செல்லாமல் இருக்க வளைந்து சென்ற போது  கண்டெய்னர் லாரி மீது மோதி   உயிரிழப்பு. ஒருவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்;

Update: 2025-10-14 10:59 GMT
திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் உள்ள RVR பெட்ரோல் பங்கின் பக்கம் இருந்து வாலரை கேட் நோக்கி கண்டெயினர் லாரிசென்று கொண்டு இருந்த போது எதிர் திசையில் வாலரை கேட்டில் இருந்து RVR பெட்ரோல் பங்க் நோக்கி TVS XL வண்டியில் சென்றவர்கள்மழை நீருக்குள் செல்லாமல் தவிர்க்க  ரோட்டில் வலதுபுறம் ஏறி சென்று கண்டெய்னர் லாரியில் மோதியதால் ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் விசாகன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் இறந்தவர்களில் ஒருவர் கலியபெருமாள் (65) Slo பெருமாள் எம்ஜிஆர் நகர் மலை சத்தி ரோடு சிறுமுளசி திருச்செங்கோடு (சம்பவ இடத்திலேயே இறந்தவர்) 2வது நபர் மாரிமுத்து (65) Sloராமசாமி அருந்ததியர் தெரு நாராயணம் பாளையம் கருவாப்பட்டி po திருச்செங்கோடு (விசாசன் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்) சம்பவம் குறித்துதகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார்  இறந்து போனவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரச மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Similar News