ராசிபுரத்தில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: 500.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு...

ராசிபுரத்தில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: 500.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு...;

Update: 2025-09-09 15:33 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் JCI இராசிபுரம் மெட்ரோ, இராசிபுரம் ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல், ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் எஜூகேஷனல் சிட்டி, இராசிபுரம் அரிமா சங்கம், இராசிபுரம் இன்னர்வீல் சங்கம், வாசவி கிளப் வனிதா இராசிபுரம், ஞானமணி கல்வி நிறுவனங்கள், Dr.ஹனிமன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி, மற்றும் முத்தாயம்மாள் மெமோரியல் கலை & அறிவியல் கல்லூரி, வித்யா நிகேதன், மற்றும் ராசிபுரம் காவல்துறை இணைந்து புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. பேரணியை ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார், மற்றும் தனியார் அமைப்பு நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். பேரணியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள், நோய்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகளை குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம், சேலம் சாலை,கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் இறுதியாக கோனேரிப்பட்டி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் JCI மணிமேகலை தமிழரசன், ரோட்டரி கிளப் சுரேந்திரன், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் ஹரிஹரன், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் எஜுகேஷன் சிட்டி பாஸ்கர், லயன்ஸ் கிளப் ராசிபுரம் பெரியசாமி, இன்னர்வில் கிளப் சிவ லீலஜோதி கோபிநாத், வாசவி கிளப் வனிதா ராசிபுரம் பூர்ணிமா, மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள், தொண்டு நிறுவன அமைப்பினர், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

Similar News