கொல்லிமலை வல்வில் ஓரி விழாவில் தோட்டக்கலை துறை சார்பில் 50,000 ரோஜாக்களால் மலர்க் கண்காட்சி!

ரோஜா மலர்கள் அலங்கரிக்கப்பட்ட யானை வடிவம், பல வண்ண மலர்களால் ஆன ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி மற்றும் காதல் சின்னம், காய்கறிகளை கொண்டு பட்டாம்பூச்சி, சிறு தானியங்களை கொண்டு செய்யப்பட மக்களுடன் முதல்வர் இலட்சினை (லோகோ)ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-08-03 05:34 GMT
மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ரோஜா மலர்களால் ஆன டாம் பல்வகை மலர்களால் ஆன மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஜா மலர்கள் அலங்கரிக்கப்பட்ட யானை வடிவம், பலவண்ண மலர்கலால் ஆன ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பிக்குள் முத்து மற்றும் காதல் சின்னம்(ஹார்ட்டின்), காய்கறிகளை கொண்டு பட்டாம்பூச்சி, சிறு தானியங்களை கொண்டு செய்யப்பட மக்களுடன் முதல்வர் சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மலர் கண்காட்சியில் 50000 மலர்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. ரோஜா, ஜெர்பரா. கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பாங்கி உட்பட 20 வகையான மலர்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.... நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News