கரூர் மாவட்டத்தில் கோட்டை தீர்த்த கனமழை.505.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் கோட்டை தீர்த்த கனமழை.505.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் கோட்டை தீர்த்த கனமழை.505.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழையும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்யும் என அறிவிப்பு செய்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது போல கரூர் மாவட்டத்திலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்துள்ளது இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 23.40 மில்லி மீட்டரும் மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 96 மில்லி மீட்டரும் அனைப்பாலயத்தில் 66.40 மில்லி மீட்டர் க.பரமத்தியில் 17 மில்லி மீட்டர் குளித்தலையில் 39 மில்லி மீட்டர் தோகை மலையில் 39.40 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 61.50 மில்லி மீட்டர் மாயனூரில் 52 மில்லி மீட்டர் பஞ்சபட்டியில் 41 மில்லி மீட்டர் கடலூரில் 27 மில்லி மீட்டர் பாலவிடுதியில் 30 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 12 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 505.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 42.11 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.