ராசிபுரத்தில் சே குவேராவின் 58-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு:
ராசிபுரத்தில் சே குவேராவின் 58-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு:;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சே குவேராவின் 58-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட சே குவெராவின் திருவுருவப்படத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட விடுதலை கழகம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சே குவெராவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சே குவேராவின் உருவப்படத்திற்கு மலர்தூவி முழக்கங்கள் எழுப்பி அவருக்கு செவ்வணக்கம் செலுத்தப்பட்டது நினைவேந்தல் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் டி.என்.கிருஷ்ணசாமி,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.செங்கோட்டையன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் பி.ஆர்.செங்கோட்டுவேல். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் மற்றும் நாமக்கல் மண்டல துனைச் செயலாளர் அரசன். திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகர செயலாளர் பிடல் சேகுவேரா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கபிலன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் சாதிக், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.மீனா திராவிடர் விடுதலைக் கழகத்தின் ராசிபுரம் நகர அமைப்பாளர் சுமதிமதிவதனி, முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகர பொருளாளர் பி. சலீம், நகர குழு உறுப்பினர்கள் என்.பயாஸ். எல்.தன்ராஜ் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கார்த்தி, நிகழ்வில் மேலும் பலர் பங்கேற்றனர்.. விழாவில் நன்றி உரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகர குழு உறுப்பினர் ஏ.சி.ராஜா. உள்ளிட்ட இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.