வெறிநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம், கொன்னபாளையம் அரண்மனை தோட்டம் பகுதியில் வெறிநாய் கடித்து குதறியதால் 6 செம்மறி ஆடுகள் பலியான சம்பவம் விவசாயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-26 01:54 GMT

நத்தக்காடையூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம் ,நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் கொன்னபாளையம், அரண்மனை தோட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். (வயது60) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடு,மாடு கள் மற்றும் நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தனக்கு சொந்தமான தோட்டத்தில் 35 செம்மறி ஆடுகளை விட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.இதனை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் தோட்டத்தில் சில வெறிநாய்கள் உள்ளே புகுந்துசெம்மறி ஆடுகளை துரத்தி தலை, கழுத்து, உடம்பு பகுதிகளில் கடித்து குதறின.

நேற்று காலை பாலசுப்பிரமணியம் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது செம்மறி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்து அவற்றை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் வெறி நாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் செத்தது தெரிய வந்தது. மேலும் காயமடைந்த 4 செம்மறி ஆடுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

வெறிநாய்கள் கூட்டம் கடித்து செத்த 6 செம்மறி ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.மேலும் வெறி நாய்கள் கூட்டம் கடித்து குதறியதில் உயிரிழந்த செம்மறி ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை மூலம் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று இந்த கிராமப் பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News