கட்டப்பஞ்சாயத்துக்கு ஒத்து வராத குடும்பத்தை 6 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சித்திரவதை
மயிலாடுதுறை அருகே 6 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டை முள்கம்பி வேலிவைத்து அடைத்து துன்புறுத்தல் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புலம்பல்
மயிலாடுதுறை அருகே நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரத்தை சேர்ந்தவர் பஞ்சுநாதன் மனைவி அமுதா (55). இவர் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த தங்கசாமி மகன் சுரேஷ் குமார் என்பவர், அமுதாவின் இடத்தை அபகரிக்க பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காததால் தமது செல்வாக்கை வைத்து ஊரில் பஞ்சாயத்து வைத்துள்ளார். பஞ்சாயத்தார் சுரேஷ்க்கு இடத்தை கொடுக்கச் சொல்லி அமுதாவுக்கு எதிராக கட்டுப்பாடு வித்தனர். இது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் அமுதா குடும்பத்தினர்புகார் அளித்தனர் இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் மற்றும் ஊர் முக்கியத்துவங்கள் அமுதா குடும்பத்தினரை 2018 ஆம் முதல் இன்று வரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். சுரேஷ் குடும்பத்தினர் அடிக்கடி அமுதா குடும்பத்தினரிடம் தகராறு செய்வது அடித்தடியில் ஈடுபடுட்டு வருவது வாடிக்கை. இதுகுறித்து மணல்மேடு காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என தொடர்ந்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கப்படவில்லை. இதனால் ஊர் கட்டுப்பட்டால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் அமுதாவின் வீட்டை சுற்றி சுரேஷ் மற்றும் ஊர் தரப்பினர், 15க்கும் மேற்பட்டோர் முள் கம்பிவேலியை வைத்து அடைத்துவிட்டனர். இதை எதிர்த்து கேட்ட அமுதா மற்றும் அவரது மகனை அடித்து போட்டனர். அடிபட்ட இருவரையும் அவசர போலீஸ் 100 என்ற வேன் மூலம் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கம்பி வேலி அடைக்கப்பட்ட வீட்டுக்குள் அமுதாவின் கணவரும் மருமகனும் இருக்கிறார்கள் . மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வுக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் அமுதா மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தாங்கள் ஆறு ஆண்டுகளாக ஊர் விலக்கு செய்யப்பட்டு தொடர் கொடுமைகளை சந்தித்து வருகிறோம் தற்போது எங்களை அடித்து போட்டு விட்டனர் வீட்டைச் சுற்றி முள்கம்பி வேலி அமைத்துள்ளனர். உடனே நடவடிக்கை எடுத்து முள் கம்பி வேலியை அப்புறப் படுதி எங்களை வாழவிடாமல் ஊர் விளக்கம் செய்தவர்கள், என் குடும்பத்தை அடித்து போட்டவகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅவர் கேட்டுக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்க தமது நேர்முக உதவியாளரிடம் கூறினார் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி. நேர்முக உதவியாளர் சம்பந்தப்பட்ட நபரிடம் புகார் மனுவை பெற்றுவிசாரணை மேற்கொண்டார். நம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் சங்கமித்ரன் கூறுகையில் தொடர்ந்து மயிலாடுதுறையில் கட்டப்பஞ்சாயத்தார்களது சமூக விலக்கம் என்பது நடைபெற்று வருகிறது, இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் அமுதா குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை ந எடுக்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.