உயிருக்கு போராடிய 6அடி நீள பாம்பு மீட்பு
கம்பி வேலிக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்த 9 அடி நீள சாரைப்பாம்பு பாம்புப்பிடி வீரர் மீட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து வனப்பகுதியில் விடுவித்தார்;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் சித்தி விநாயகர் தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி என்பவர் வீட்டின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிக்குள் சாரைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. வெகுநேரமாக போராடியும் அங்கிருந்து வெளியேற முடியாமல் பாம்பு தவிப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர், இதுகுறித்து சீர்காழியை சேர்ந்த பாம்புப்பிடி வீரர் பாண்டியன் என்பவருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த பாம்புப்பிடி வீரர், கம்பி வேலியில் இருந்து வெளியேற முடியாமல் தாகத்துடன் தவித்த ஒன்பதடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு அதற்கு குடிக்க தண்ணீர் வழங்கினார். தொடர்ந்து, பாம்பின் உடலில் தண்ணீரை ஊற்றி அதன் உடல் வெப்பத்தைக் குறைத்த பின்னர், அதனை பாதுகாப்பாக அங்கிருந்து வனப்பகுதியில் விடுவித்தார்.