வேன் மீது கார் மோதியதில் இரு சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
குமாரபாளையம் அருகே வேன் மீது கார் மோதியதில் இரு சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.;
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை பகுதி, ஐய்யன் தாபா அருகே, நேற்றுமுன்தினம் வேன் மீது ஈக்கோ கார் மோதியது. இதில் இரு சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர்கள் பழனிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, சேலம் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இதில் சேலம் சத்யபிரியா, 39, சுவேதா, 16, திவ்யதர்ஷினி , 14, கவின், 8, திருவண்ணாமலையை சேர்ந்த அசோக்குமார், 41, பவண், 4 என்பது தெரியவந்தது. காயமடைந்த இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன் ஓட்டுனர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.