அனுமதி இன்றி பேனர் வைத்து 6 பேர் மீது வழக்கு பதிவு
மொரப்பூர் பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி பேனர் வைத்து 6 பேர் மீது வழக்கு பதிவு;
அரூரில் நேற்று முன்தினம் அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க மொரப்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு பேனர்கள் அனுமதியின்றி வைத்த மொரப்பூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலர் செல்வம்,பாபு, பூபதி, ஆனந்த், சந்துரு, செல்வம் என ஆறு பேர் மீது நேற்று மொரப்பூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்