கோவை ரேஸ்கோர்ஸ் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன — உயிர்சேதம் தவிர்ப்பு !

மழையால் சிதிலமான பழைய குடியிருப்பு – கலெக்டர் அவசர காலி செய்ய உத்தரவு.;

Update: 2025-10-26 14:33 GMT
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் தொடர்ச்சியான மழையால் ஏ பிரிவில் உள்ள 6 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளில் யாரும் வசிக்காததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. 1973–75ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்பு பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதனை இடிக்க வீட்டுவசதி வாரியம் முன்பே அறிவிப்பு வழங்கியிருந்தது. சிலர் வீடுகளை காலி செய்திருந்தாலும், சிலர் இன்னும் அங்கிருந்தே வசித்து வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாவட்ட கலெக்டர் பவன்குமார், அங்கு மீதமுள்ள அரசு ஊழியர்கள் உடனடியாக வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளார். இடிபாடுகள் தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

Similar News