திருத்தணி முருகன் கோவிலில் 60 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
திருத்தணி முருகன் மலைக் கோவிலில் 60- ஜோடிகளுக்கு திருமணங்களால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.;
திருத்தணி முருகன் கோவிலில் 60 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் திருத்தணி முருகன் மலைக் கோவிலில் 60- ஜோடிகளுக்கு திருமணங்களால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று முகூர்த்த தினம் என்பதால் மலைக்கோவிலில் 60 திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருமண விழா மற்றும் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் மாட வீதியைச் சுற்றி பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் தரிசன வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட நேரம் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டு செல்கின்றனர். திருமண விழாவிற்கு வாகனங்களில் அதிகளவில் வருகை தருவதால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.