சிறுமியிடம் அத்துமீறிய 62 வயது முதியவர் போக்சோவில் கைது
காங்கேயம் அடுத்த நத்தக்கடையூர் பகுதியில் சிறுமியிடம் அத்துமீறிய 62 வயது முதியவர் போக்சோவில் கைது;
காங்கேயம் அருகே நத்தக்கடையூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ஈரோடு மாவட்டம் சிவகிரி சேர்ந்த சண்முகம் (வயது 62). இவர் 4 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாய் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.