பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் பணியின் போது உயிர்த்த காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங்ஸ் என்கிற இடத்தில் மறைந்திருந்து சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டதில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக அக்டோபர் 21ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் காவலர் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனவே திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்கம் நாளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரித்தார். மேலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட உட்கோட்ட மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள், என அனைவரும் கலந்து கொண்டனர்.