திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி பகுதியில் ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 63 வயது முதியவர் போகோ சட்டத்தில் கைது
4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தோக்கவாடி புதூர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் மணிவாசகம் என்பவர் போக்சோ சட்டத்தில் கைதுஊரக போலீசார் நடவடிக்கை;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தோக்கவாடி பகுதியில் உள்ள புதூர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகம் 63 தனியார் பள்ளி ஒன்றில் சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தற்போது எலக்ட்ரிக்கல் வேலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தறி தொழிலாளர்களின்நாலாம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுமியை நேற்று பொங்கல் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து பாலியல் சீண்டலுக்குள்ளானபெண் குழந்தை பெற்றோரிடம் கூறவே குழந்தையின் பெற்றோர் நேற்று இரவு 1098என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் தெரிவித்தனர் இது குறித்துதகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக போலீசார் தோக்கவாடிக்கு சென்று மணிவாசகத்தை கைது செய்து வந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.63 வயது முதியவர் ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் தோக்கவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.