நூலகத்துக்கு இடம் கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது

நூலகத்துக்கு இடம் கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது செய்தனர்.;

Update: 2025-07-01 04:21 GMT
அரியலூர்,.ஜூலை.1- அரியலூர் மாவட்டம், திருமானூரில், நூலகத்துக்கு இடம் கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற 7 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.திருமானூரில் புதிய நூலகம் கட்ட ஊராட்சி நிர்வாகம் இடம் வழங்க வேண்டும். திருமானூரில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகாலமாக திறக்கப்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் திருமானூர் எம்ஜிஆர் சிலை அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் பாளை.திருநாவுக்கரசு, பாஸ்கர், வரதராஜன், சுப்பிரமணியன், ஆறுமுகம், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Similar News