மார்த்தாண்டம் : பெண்ணிடம் 7 பவுன் நகை மோசடி

கவரிங் நகை கொடுத்து மோசடி;

Update: 2025-08-11 02:58 GMT
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி லிட்டில் மேரி (55) , இவர் தன்னிடம் இருந்த 5 1/2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 1/2 பவுன் தங்க வளையல் ஆகியவற்றை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கடையில் மாற்றி புதிதாக எடுக்க சென்றுள்ளார் . அப்போது பஸ் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர், மேலும் 45 வயதான பெண் ஒருவர், மற்றும் 10 வயதான குழந்தை ஒன்று சேர்ந்து நாங்கள் உங்களுக்கு கடைகளில் நல்ல லாபத்தில் நகையை மாற்றிக் கொடுக்கிறோம் என கூறி கையில் இருந்த நகைகளை வாங்கி விட்டு கவரிங் நகையை லிட்டில் மேரியிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News