கோவையில் சர்ச்சை : மாதம்பட்டி ரங்கராஜ் மீது இரண்டாவது மனைவி புகார் – 7 மாத கர்ப்பிணி கண்ணீர் !
கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.;
கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். முதல் மனைவி ஸ்ருதியை திருமணம் செய்து இரண்டு மகன்கள் பெற்றிருந்த ரங்கராஜ், விவாகரத்து எடுக்காமல் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்யை இரண்டாவது முறையாக திருமணம் செய்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் கோவிலில் எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்குப் பிறகு, ஜாய் தனது சமூக வலைதளத்தில் தாம் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பகிர்ந்திருந்தார். தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், “ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டார்” என கூறி சென்னை காவல் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். மோடி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் பிரத்தியேகமாக சமையல் செய்து புகழ் பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ் மீது வந்துள்ள இந்த புகார், கோவையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.