ராசிபுரம் அருகே 7 மாத ஆண் சிசு தொப்புல் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் விசாரணை..

ராசிபுரம் அருகே 7 மாத ஆண் சிசு தொப்புல் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் விசாரணை..;

Update: 2025-09-21 15:10 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதி அருகே உள்ள க.வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் வீடு கட்டும் பணிக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் காலை பணியாளர்கள் வழக்கம் போல் வீடு கட்டும் பணிக்கு வந்த நிலையில் மணல் அள்ளும் போது 7 மாதமே ஆன சிசு தொப்புல் கொடியுடன் புதைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர்அக்கம் பக்கத்தினர் சம்பம் குறித்து பேளுகுறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் மகாலிய அமாவாசை தினமான இன்று நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது கரு களைப்பு செய்து புகைக்கப்பட்டதா என்பது குறித்து அப்பகுதி மக்கள் குழப்பத்தில் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் உள்ள சிசிடிவி பதிவில் இரண்டு நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில் அப்பகுதிக்குள் நுழைந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.அப்பகுதி பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இதுவரை எந்த ஒரு காவல்துறையும், அரசு மருத்துவமனை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.மேலும் இறந்து கிடந்த 7 மாதமே ஆன சிசுவின் உடலை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்திய நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Similar News