இலங்கை அகதிகள் முகாம் வாலிபர்கள் 7 பேர் கைது
திண்டுக்கல் அருகே தாய்- மகன் மீது சரமாரியாக தாக்குதல், கொலை மிரட்டல் - இலங்கை அகதிகள் முகாம் வாலிபர்கள் 7 பேர் கைது;
திண்டுக்கல் தோட்டனூத்து அகதிகள் முகாமில் இருக்கும் வின்சென்ட் மகன் ஜெயபிரபாகரன்(19) இவர் வீட்டின் முன்பு நாய் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கல்லை எடுத்து வீசி சத்தம் போட்டு விரட்டினார். அப்போது அவ்வழியாக வந்த கோகுல்ராஜ்(37), தனுஷ்(எ)அஜய்(21), லோகேஸ்வரன்(21), ராஜேந்திரன்(38), சுரேந்திரன்(21), இந்திரகுமார்(40), சேனாதிராஜா(42) ஆகிய 7 பேரும் சேர்ந்து ஜெயபிரபாகரனை அசிங்கமாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கினர் இதை தடுக்க வந்த அம்மா கலாரஞ்சனியையும் சரமாரியாக அடித்து கீழே தள்ளி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.