கோவில் உண்டியலில் பணம் திருடிய 7 பூசாரிகள் கைது செய்யக்கோரி செயல் அலுவலர் போலீசில் புகார்
குமாரபாளையம் கோவில் உண்டியலில் பணம் திருடிய பூசாரிகள் 7 பேரை கைது செய்யக்கோரி சேலம் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார்.;
இந்து சமய அறநிலையத்துறைகுட்பட்ட குமாரபாளையம் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில், பூசாரி மற்றும் உதவி பூசாரிகள் உள்பட 7 நபர்கள் உண்டியலில் உள்ள பணத்தை திருடி வந்துள்ளனர். இதனை கண்டுபிடிக்க உண்டியல் நோக்கி சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தபட்டன. இதன் பதிவுகளை பார்த்த போது, அக். 5, 2014 முதல் செப். 19, 2025 வரை அவ்வப்போது திருடி வந்தது தெரியவந்தது. பூசாரிகளான வேலுமணி, சசிகாந்த், துரைசாமி, சண்முகம், மணி, சிவகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 நபர்கள் திருடிய தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை என்றும், தலைமறைவாக உள்ள சம்பந்தப்பட்ட பூசாரிகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சேலம் , இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், 42, குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பூசாரிகளை தேடி வருகின்றனர்,