காங்கேயத்தில் ஜமாபந்தி 700 மனுக்கள் பெறப்பட்டது

காங்கேயத்தில் 4 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி 700க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது;

Update: 2025-05-28 07:23 GMT
காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் தாராபுரம் ஆர்.டி.ஒ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நடந்தது. முதல் நாள் ஜமாபந்தியில் காங்கேயம் உள் வட்டத்திற்கு உட்பட்ட 10 கிராமங்களில் இருந்து 114 மனுக்களும், 2-ம் நாள் ஊதியூர் உள்ள வட்டத்திற்கு உட்பட்ட 8 கிராமத்தில் இருந்து 185 மனுக்களும், 3-ம் நாள் நத்தக்காடையூர் உள் வட்டத்திற்கு உட்பட்ட 10 கிராமங்களில் இருந்து 139 மனுக்களும் பெறப்பட்டது. கடைசி நாளான நேற்று வெள்ளகோவில் உள் வட்டத்திற்கு உட்பட்ட 14 கிராமங்களில் இருந்து 265 கோரிக்கை மனுக்கள் என மொத்தம் 703 மனுக்கள் பெறப்பட்டது. காங்கேயம் தாசில்தார் மோகனன், மண்டலா துணைவட்டாச்சியர் சுந்தரமூர்த்தி, தலைமை இடது துணை வட்டாச்சியர் வனிதா, வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன்,ருக்மணி,ஆறுமுகம்,சுந்தரி உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News