வீரகேரளம்புதூரில் ரூ7000 லஞ்சம் இருவர் கைது
வீரகேரளம்புதூரில் மின் இணைப்புக்கு ரூ7000 லஞ்சம் வாங்கிய இருவர் கைது;
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா, கீழ வீராணம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் மகன் செல்வகணேஷ் (வயது-30) என்பவர் அவரது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு 2020 ஆம் ஆண்டு மின் கம்பம் நட ரூ.24,000/-ம் பணம் செலுத்தி இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியிருந்துள்ளார். அந்த மின் இணைப்பு சம்மந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வீ.கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்தாரரிடம் அவரது விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் என்று கூறினார் அதன்பேரில் கடந்த 22.11.2025-ம் தேதி செல்வ கணேஷ் பிரேம் ஆனந்தை சந்தித்து கேட்டபோது நிலத்திற்கான பட்டா, இசி, மோட்டார் பில், டெஸ்ட் ரிப்போர்ட், அக்ரிமெனட் ஆகிய ஆவணங்கள் மற்றும் ரூபாய் ரூ.10,000/-த்துடன் பணத்துடன் வந்து அவரை பார்க்க சொன்னதாகவும், அதன்பேரில் 24.11.2025-ம் தேதி சு பிரேம் ஆனந்தை பார்த்து ரூ10,000/- பணம் கொடுக்க முடியாததால் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதாகவும் அப்போது பிரேம் ஆனந்த் ரூ.7,000/- பணம் கொடுத்தால்தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராக சொல்லிவிட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத செல்வ கணேஷ் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார் அதன்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வீ.கே.புதூர் பிரேம் ஆனந்த் என்பவர் மீது 24.11.2025-ம் தேதி வழக்கு பதிவு செய்து ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் 7,000/-த்தை செல்வ கணேஷிடம் கொடுக்க அந்த பணத்துடன் இன்று 25.11.2025-ஆம் தேதி புகார்தாரர் பிரேம் ஆனந்தை சந்தித்து மேற்படி பணத்தை அவரது நண்பர் கழூநீர்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் மகன் துரை (வயது-43) என்பவரிடம் கொடுக்க கூறியுள்ளார். அந்த லஞ்சப்பணத்தை துரை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால் சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் துரை ஆகியோர் கைது செய்தனர் மேலும் இதுபோல் பொதுமக்களிடம் அரசாங்க ஊழியர்கள் லஞ்சமாக பணம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம் என டிஎஸ்பி பால் சுதாகர் தெரிவித்தார்