ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்  742 பயனாளிகளுக்கு ரூ.70.42 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள்- அமைச்சர், எம்பி., வழங்கினர்.

ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்  742 பயனாளிகளுக்கு ரூ.70.42 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள்- அமைச்சர், எம்பி., வழங்கினர்;

Update: 2025-09-30 15:39 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 742 பயனாளிகளுக்கு ரூ.70.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் உத்தரவுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ராசிபுரம் நகராட்சி, பிள்ளாநல்லூர் பேரூராட்சி, பட்டணம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.மதிவேந்தன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், அரசு உத்தரவுகள் வழங்கிப் பேசினார். இதில் பேசிய அவர்,  நாமக்கல் மாவட்டத்தில் இது வரை 226 முகாம்கள் நடத்தப்பட்டு, 97,593 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 66,876 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. 15.07.2025 முதல் 19.09.2025 வரை மட்டும் ராசிபுரம் நகராட்சி, பிள்ளாநல்லூர், பட்டணம், ஆகிய பேரூராட்சி பகுதிகளில் 19 முகாம்கள் நடத்தப்பட்டு 9020 மனுக்கள் பெறப்பட்டதில், இன்றைய தினம் 742 பயனாளிகளுக்கு ரூ.70.42 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, முகாமில் மாற்றுத்திறனாளிகள் பேட்டரி வீல்சேர், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், தாழ்த்தப்பட்டோருக்கு நலத்திட்ட தையல் எந்திரம், பிற்பட்டோருக்கு சலவை எந்திரம், காப்பீடு அட்டை போன்ற உதவிகளும், பட்டா, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்றவைக்கு பெயர் மாறுதல் உத்தரவுகளையும் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர்,  ராசிபுரம் அட்மா குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்  வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News