பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, மெட்டாலா பகுதியில், பாஜக-வின் நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா..
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, மெட்டாலா பகுதியில், பாஜக-வின் நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா..;
பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு சரக்கு - சேவை வரி பெருமளவு குறைக்கப்பட்டு இருப்பது வேளாண் துறையை மேலும் ஊக்குவிக்கும் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் K .P. இராமலிங்கம் பேடியின்போது கூறினார்.. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில், பாஜக-வின் நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில், பாரம்பரிய உணவு திருவிழா, சிறுதானியங்கள் கண்காட்சி- கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம் (17.09.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர் K.P. இராமலிங்கம் கலந்துகொண்டு,, பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதை நெல் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். மேலும், அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமையும் அவர் பார்வையிட்டு, அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், ஆர். பட்டணம் மற்றும் இராசிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரதமரின் 75-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டாக்டர் கே.பி. இராமலிங்கம், பொது மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். முன்னதாக நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது நாட்டில், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 11 ஆண்டுகாலம், மிகப்பெரிய கட்டமைப்புகளை உருவாக்கி நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்று செல்கிறார். அதே நேரத்தில் தேசத்தின் பாரம்பரிய பண்பாடு நாகரிகம் கலாச்சாரம் அனைத்திற்கும் அடித்தளமாக விளங்கும் விவசாய பெருங்குடி மக்களின் பெருங்குடி மக்களின் தொழில்கள் முக்கியத்துவம் கொடுத்து உலக பொருளாதாரத்தில் போட்டியிடும் வல்லமையை இந்த நாட்டு மக்களுக்கு உருவாக்கியுள்ளார். பாரம்பரிய விவசாய பலன்களை நாட்டு மக்கள் பெற வேண்டும் என்பதற்காக, விவசாய திட்டங்களை சிறுதானிய உற்பத்திக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார். விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு, அமெரிக்கா வேளாண் பொருட்களை இந்திய சந்தைகளுக்கு அனுமதிக்காமல் துணிச்சலான முடிவை பிரதமர் எடுத்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்த போதிலும், உடனே தேசத்தந்தையாக விளங்கும் பாரத பிரதமர், பல்வேறு துறைகளில் சரக்கு சேவை வரியை பெருமளவில் குறைத்துள்ளார். இதன்மூலம் உள்ளூர் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். அதைப்போல அவரது பிறந்த தினத்தில் அவர் நினைத்த பாரம்பரிய விவசாய சிறுதானிய திருவிழாவை நடத்தி இருப்பது பாராட்டுக்குரியதாகும். கீரைகள், சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை பாஜக நடத்தியுள்ளது. இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய பாரதத்தை உருவாக்கி தரும். பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால், இன்று உலக பொருளாதாரத்தில் 4-வது இடத்திற்கு நாம் வளர்ந்துள்ளோம். வருகின்ற 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குகின்ற தொடக்கம்தான் அவரது பிறந்த நாளில் வேளாண் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நமது நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில், பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் சேர்க்கப்பட்டு நேரடியாக பயன்பெறும் வகையில், வழிவகை செய்யப்படும். தேசம் காப்போம், தமிழகத்தை வெல்வோம், அதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் அடித்தளமாக அமையும் என்றும் டாக்டர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி கோவிட் காரணத்தினால் உலகமே பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், நமது நாட்டின் விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு அளித்தார். நாடு முழுவதும் இலவச கோவிட் ஊசிகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிறுதானிய உற்பத்திக்கு அதிக சலுகைகளை பிரதமர் வழங்கி வருகிறார். சீரமைக்கப்பட்ட சரக்கு-சேவை வரியில் உணவுப் பொருட்களுக்கு முழு விலக்கு அளித்துள்ளார். 28% வரி விதிப்பை 18 சதவீதமாகவும், 12% ஐ 5% ஆகவும் குறைத்து விவசாயத் துறையை மேம்படுத்தி வருகிறார். இதனால் தேசத்தின் பாரம்பரிய விவசாயம் மேம்படும். சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கும். இன்று அவரது பிறந்த நாளில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இது போன்று பாரத பிரதமரின் லட்சியம் நிறைவேறுகிறது. திமுக முப்பெரும் விழா நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாக்காளர்களை உறுப்பினர்கள் ஆக்கி அவர்களுக்கு சலுகை தருவதாக அறிவித்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பாகவே வாஷிங் மெஷின் போன்ற இலவசங்களை தர தயாராகி விட்டார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளார்கள். அதில் முதல் கட்டமாக சட்டமன்ற வாரியாக 20 கோடி சென்று சேர்ந்துவிட்டது. மேலும் 30 கோடி கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாட்டு மக்களின் பணத்தை சுரண்டி சம்பாதித்து ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை, தேர்தலுக்கு செலவு செய்ய தயாராக உள்ளார்கள். ஆனால் மக்கள் மிகத் தெளிவான முடிவெடுப்பார்கள். 1996 தேர்தலில் ஜெயலலிதா, 2001 தேர்தலில் திமுக - கூட்டணி தோற்றது. அதுபோன்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக பாஜக கூட்டணி முழுமூச்சோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திமுக ஊழல் பணத்தை விநியோகம் செய்தாலும் அவர்களுக்கு நாட்டு மக்கள் சரியான பதிலடியை தருவார்கள். டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அவருடைய விருப்பம் ஆகும். பாஜக தலைமை வெளிப்படையாக அதிமுக-உடன் கூட்டணி, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று தெளிவுபடுத்திவிட்டது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்கள்தான், NDA கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்கள். பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் காலத்திலிருந்து ஒரு கட்சியிலிருந்து வெளியேறிய சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிமுகவிலிருந்து சென்றவர்கள், இன்று திமுகவில் அமைச்சர்களாககூட உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரச்சாரமானது தேர்தலில் வாக்குகளாக மாறுமா என தெரியாது. பிரதம மந்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சேவை இருவாரம் நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது. பாரம்பரிய இயற்கை உணவு முறைகளை பின்பற்றும்போது அனைவரும் ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும், இதனை வலியுறுத்தி, பாஜக இளைஞரணி சார்பில், தேசம் முழுவதும் வருகின்ற 21-ம் தேதி மாநிலத்திற்கு ஓர் இடம் என்ற வீதத்தில் ஆரோக்கிய இந்தியா மாரத்தான் நடைபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் வருகின்ற 21-ம் தேதி மாநில அளவிலான பாஜக சார்பில் ஆரோக்கிய இந்தியா 2025 மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான இளையோர் பங்கேற்பார்கள் என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் மெட்டாலா பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பாஜக ஒன்றிய செயலாளர் காளியப்பன்,பாஜக மாநில மாவட்ட ஒன்றிய நகர அணி பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.