தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் வசித்து வருபவர் நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி வயது 75 கணவன் நவநீதன் 25 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளா
தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் வசித்து வருபவர் நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி வயது 75 கணவன் நவநீதன் 25 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் வசித்து வருபவர் நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி வயது 75 கணவன் நவநீதன் 25 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு முத்துராஜா பொன்னுத்தாயி முருகேஸ்வரி பாலசுப்ரமணியன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். நால்வருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்த நிலையில் நான்காவது மகன் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி விஜி தம்பதியினர் தாய் சரஸ்வதி வீட்டின் அருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதர் வயது 22 சூர்யா வயது 19 என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஸ்ரீதர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வீட்டில் அவ்வப்போது தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தந்தை பாலசுப்ரமணியன் மற்றும் தாய் விஜி மது மற்றும் கஞ்சா போதையில் இருக்கும் பொழுது மகனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளனர். மேலும் வீட்டின் தனியாக அருகே வசித்து வந்த பாட்டி சரஸ்வதி மட்டும் பேரன் ஸ்ரீதர் போதைக்கு அடிமையாகி வீணாவதை கண்டு அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த ஸ்ரீதர் அவரது பாட்டி சரஸ்வதி வீட்டிற்கு சென்றுள்ளார். ஸ்ரீதர் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பதை கண்ட பாட்டி சரஸ்வதி பேரன் ஸ்ரீதரை கண்டிக்கும் நோக்கில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் தனது சொந்த பாட்டி என்று கூட பாராமல் போதை தலைக்கேறிய நிலையில் திட்டிக் கொண்டிருந்த பாட்டியை அடித்து கீழே தள்ளி உள்ளார் கீழே தள்ளியதில் காயமடைந்த பாட்டி வழி தாங்க முடியாமல் கதறியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் அருகில் இருந்த அருவாமனை எடுத்து பாட்டியின் தலை நெத்தி என மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு மேலும் கதறிய பாட்டியின் காலை பிடித்து தர தரவென வீட்டின் வெளியே இழுத்து வந்து வெளியே இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு. போதை தலைக்கு ஏறி நிலையில் எங்கும் எழுந்து செல்லாமல் பாட்டியை கொன்றுவிட்டு அதே இடத்தில் அமர்ந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போதையில் இருந்த ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மூதாட்டி சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளுவது பல இடங்களில் அரங்கேறி வரும் நிலையில் கஞ்சா மற்றும் மது போதையில் தனது சொந்த பாட்டியை சரமாரியாக வெட்டியும் தலையில் கல்லை தூக்கி போட்டு போன்ற போதை பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.