நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் எம். ஆர். சி. ராணுவ மையத்தில் 77 வது ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது........

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் எம். ஆர். சி. ராணுவ மையத்தில் 77 வது ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது........;

Update: 2025-01-16 02:28 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் எம். ஆர். சி. ராணுவ மையத்தில் 77 வது ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது........ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது 1949 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் கமாண்டன்ட் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சாரிடமிருந்து இந்திய ராணுவ அதிகாரியான லெப்ட்னன்ட் ஜெனரல் கே. எம். கரியப்பாவிடம் ஜனவரி 15 ஆம் தேதி ராணுவம் ஒப்படைக்கப்பட்டது அன்று முதல் இன்று வரை ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் எம். ஆர். சி. ராணுவ மையத்தில் இன்று 77வது ஆண்டு ராணுவ தினம் எம் ஆர் சி கமாண்டன்ட் கிறிஸ்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் களரி கேரளா செண்டை மேளம் சிலம்பம் வால் சண்டை போன்ற தற்காப்பு கலைகளை செய்து காட்டினார் மேலும் பள்ளிக் குழந்தைகளின் யோகா பயிற்சியும் காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் இறுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News