இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர 8வது மாநாடு
குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர 8வது மாநாடு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர 8வது மாநாடு நடந்தது. குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர 8வது மாநாடு நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. நகர குழு உறுப்பினர் கந்தசாமி கொடியேற்றி வைத்தார். நகர குழு உறுப்பினர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி பேசினார். வேலை அறிக்கை, வரவு, செலவு கணக்குகளை நகர செயலர் சக்திவேல் சமர்ப்பித்தார். புதிய கமிட்டி, செயலர், மாவட்ட மாநாடு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், கணேஷ்பாண்டியன், மாவட்ட செயலர் கந்தசாமி வாழ்த்தி பேசினர். நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், மாதேஷ் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். குமாரபாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அள்ளுவதில்லை, நகரின் அனைத்து பகுதியிலும் குப்பைகள் தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் போதிய தூய்மை பணியாளர்கள் நியமித்து, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி, பகல் மற்றும் இரவு நேரங்களில் காவலர்கள் நியமிக்க வேண்டும், நகரின் பல இடங்களில் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை போட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வில்லை. பொதுமக்கள் இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளாவதால் உடனே பூமி பூஜை போட்ட இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சண்முகம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.