கலவையில் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை

கலவையில் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை;

Update: 2025-08-02 05:08 GMT
கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2 நாட்களாக வியாபாரிகள் மறைமுக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பா ளர் சிவக்குமார் வியாபாரிகளிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதில் வியாபாரிகள் நேற்று ஏலத்தில் பங்கேற்று நெல் மூட்டைகளை வாங்கி சென்றனர். அதிகபட்சமாக கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரம் நெல் முட்டைகள் விற்பனை ஆனது. இதில் கோ 51 நெல் ரகம் அதிக விலை 1,289 ரூபாய்க்கும், குண்டு நெல் ரகம் 1,379 ரூபாய்க்கு, மகேந்திரா நெல் ரகம் 1,439 ரூபாய்க்கும் விற்பனையானது.மேற்கண்ட தகவலை கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்தார்.

Similar News