வால்பாறையில் கரடி தாக்கி 8 வயது சிறுவன் பலி !
கோவை மாவட்டம் வால்பாறை வேவர்லி எஸ்டேட் 2-ம் பிரிவு பகுதியில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழந்தது துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.;
கோவை மாவட்டம் வால்பாறை வேவர்லி எஸ்டேட் 2-ம் பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் மாலை கரடி தாக்கி சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றது. வடமாநிலத்தை சேர்ந்த நூர்ஜல் ஹக் (8) என்ற சிறுவன், தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள குடியிருப்பு வீட்டிற்கு பால் வாங்கச் சென்றார். மாலை 6.40 மணியளவில் அவர் காணாமல் போனதால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தேட ஆரம்பித்தனர். தேடுதல் நடவடிக்கையின் போது, அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆரம்பத்தில் மர்ம விலங்கு தாக்கியதாக வனத்துறை தெரிவித்திருந்த நிலையில், பின்னர் விசாரணையில் கரடி தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.