மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இராசிபுரம் பகுதியில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் சிறை பிடிப்பு.
மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இராசிபுரம் பகுதியில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் சிறை பிடிப்பு.;
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் வடக்கு கட்டுப்பாட்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாமக்கல் வடக்கு M.பதுவை நாதன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தA.செல்வகுமார் அவர்கள் ராசிபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டார், இதில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 3 டாட்டா ஏஸ் வாகனங்கள், 1 மேக்ஸி கேப், மற்றும் 1 கனரக சரக்கு வாகனம் என 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரம் அலுவலக வளாகத்தில் சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் சோதனையின் போது கண்டறியப்பட்ட தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 2 டாட்டா ஏஸ் வாகனங்கள் மற்றும் ஒரு பயணியர் ஆட்டோ ரிக்க்ஷா சிறைபிடிக்கப்பட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்திலும். என மொத்தம் 8 வாகனங்கள் மேல் நடவடிக்கைக்காக சிறைபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று அதிக பாரம் ஏற்றி இயக்கப்பட்ட 4 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அவ்வாறு ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் அனுமதியில் உள்ளவாறு அதிக பாரம் ஏற்றாமல் இயக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டது. இச்சிறப்பு வாகன தணிக்கை மூலம் அரசுக்கு இணக்க கட்டணமாக ரூபாய் 3 லட்சம் இணக்க கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு வாகன தணிக்கை ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், வெண்ணந்தூர், ஆகிய பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாமக்கல் வடக்கு திரு.M.பதுவைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.